அது ஆலயப் பிரார்த்தனை; ஜாகிருக்கு எதிரான போராட்டம் அல்ல - இராமசாமி

சமூகம்
Typography

கோலாலம்பூர், மே 19- இந்து ஆலயத்தில் நடத்த திட்டமிடப்பட்ட கூட்டம் பிரார்த்தனைக்கு தான். அது சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிரான போராட்டத்திற்கான கூட்டம் அல்ல என பினாங்கின் இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார். 

பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவருமான அவர் கூறுகையில், ஜாகிர் நாயக் மற்றும் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் ஆகியோரின் சமயத்தைப் பற்றிய தவறான பேச்சியினால் மனம் நொந்துக் கொண்ட இந்துக்களுக்காகவே பிரார்த்தனைக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

"கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு ஒருசில தனிநபர்கள் கடந்த சில காலமாக இந்து சமயத்தை அவமதித்து வரும் ஜாகிர், அஸ்ரி போன்றோர் மீது போலீசில் புகார் செய்ய திட்டமிட்டுள்ளனர்" எனவும் பேராசிரியர் இராமசாமி கூறினார்.

முன்னதாக போலீசிடம் சம்பந்தப்பட்ட தரப்பு அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தது. அது குறித்து, "இவ்விசயத்தில் போலீஸ் அனுமதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதைக் கூற போலீசிக்கு தேவை இல்லை என இராமசாமி சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS