என் ஆரோக்கியத்திற்கு காரணம்....!- மனம் திறக்கும் துன் மகாதீர்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், மே 19- "எளிமையான வாழ்க்கை, குறைவான உணவு, மதுபானம் மற்றும் சிகரெட் ஆகிய இரண்டையும் தொடாததால் தான் நான் இன்றும் ஆரோக்கியமாக இருக்கிறேன்" என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

பொதுமக்களுடன் முகநூலில் நேரலையாக உரையாடிக்கொண்டிருந்த துன் மகாதீர், மக்களில் ஒருவர் கேட்டக் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார். "வெள்ளிக்கிழமை தொழுகையின்போது உங்களை விட வயது குறைந்த பலர் கீழே அமர்ந்து தொழுகை மேற்கொள்ளும்போது நீங்கள் எப்படி (இந்த வயதிலும்) நின்று கொண்டே தொழுகை செய்கிறீர்கள் என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மகாதீர், "என்னுடைய ஆரோக்கியத்தைப் பற்றி என்னிடம் கேட்டால், நான் புகைப்பிடிப்பது கிடையாது. மது அருந்தும் பழக்கமும் இல்லை, எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான உணவை மட்டுமே எடுப்பேன். இது தான் நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம்" என மகாதீர் பதிலளித்தார்.

"நாம் வாழ்வில் மிதவாத போக்கை தான் கடைப்பிடிக்க வேண்டும். அதிகப்படியான தீவிரவாத போக்கை அல்ல என்பதைக் கூற விரும்புகிறேன்" என அவர் மேலும் கூறினார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS