முஸ்லிம் அல்லாதார் தரும் மரியாதையை முஸ்லிம்களே, திரும்பத் தருவீர்! -ஜொகூர் சுல்தானா

சமூகம்
Typography

ஜொகூர்பாரு, ஏப்ரல்.20- தங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற மரியாதையை முஸ்லிம்கள், தங்களின் மதத்தைச் சாராத மற்ற மலேசியர்களுக்கும் திரும்பத் தரவேண்டும் என்று ஜொகூர் சுல்தானா ராஜா ஷாரித் சோஃபியா சுல்தான் இட்ரிஷ் ஷா கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் அவர்கள் சிறுபான்மையினரில் ஒருபகுதியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதே அவர்களுக்குத் தெரியாது என்று அவர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

நம்மில் வெளிநாட்டில் படித்தவர்களுக்கோ அல்லது வாழ்ந்தவர்களுக்கோ தான் சிறுபான்மையினரான இருப்பது பற்றிய உணர்வு எத்தகையது என்றும் அதனை ஏற்றுக்கொள்ளவும் கற்றுக் கொண்டிருப்பர். அதேவேளையில் அவர்களின் நாட்டில் வாழும் போது பிற சமயத்தினரின் பரிவை நாம் காணமுடிகிறது, ஏற்கமுடிகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்ரேய்ட் டைம்ஸ் தினசரியின் லண்டன் நிருபரான ஷாஹாரா ஒஸ்மான், தலையில் டூடோங் அணிந்து லண்டன் தேவாலயம் ஒன்றில் அமர்ந்திருந்த புகைப்பட்டத்தை நான் பார்த்த நினைவிருக்கிறது என்றார் அவர்.

அதுமட்டுமல்ல, தம்முடைய மூத்தமகன் இந்திய இராணுவத்தில் சேவையாற்றி, தமது சேவை முடித்துக் கொண்டு இந்தியாவை விட்டுப் புறப்படும் போது அவருடைய சக இராணுவ வீரர்கள் அவரை பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றனர் என்பதை சுல்தானா நினைவுகூர்ந்தார். 

அவர்கள் இந்துக்கள். ஆனாலும், தங்களின் தலையை கைக்குட்டையால் மூடியவாறு, காலணிகளை எல்லாம் கழற்றி வைத்து விட்டு பள்ளிவாசலில் தங்களின் மரியாதையை புலப்படுத்தினர். முஸ்லிம்களாகிய நாம், நமது சமயத்தைச் சாராத மற்ற மலேசியர்களுக்கும் இதே மாதிரியிலான மரியாதை புலப்படுத்த வேண்டும் என்று தமது முகநூலில் ஜொகூர் சுல்தானா குறிப்பிட்டுள்ளார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS