போலீஸ் பற்றி முகநூலில் அவதூறு: ஶ்ரீசஞ்ஜீவன் மீது மற்றொரு வழக்கு!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், ஏப்ரல்.20- தம்முடைய முகநூல் பதிவில் அரச மலேசியப் போலீஸ் படையை அவதூறு செய்ததாக 'மைவாட்ச்' எனப்படும் அரசு சாரா அமைப்பின் தலைவரான ஶ்ரீசஞ்ஜீவனுக்கு எதிராக பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தம் மீதான குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரினார். ஜனவரி 3ஆம் தேதி காலை 8.30 மணியளவில் போலீஸ் படை பற்றி தனது முகநூலில் அவதூறு செய்ததாக குற்றவியல் சட்டத்தின் 500ஆவது பிரிவின் கீழ் சஞ்ஜீவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஒரு நபர் உத்தரவாதத்தில் 5,000 ரிங்கிட் ஜாமீன் விதிக்கப்படவேண்டும் என்று பிராசிகியூசன் அதிகாரி சைபுல் ஹஸ்மி வலியுறுத்தினார். 

எனினும், தமது கட்சிக்காரரான சஞ்ஜீவன் மீது இதர நீதிமன்றக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவருக்கான ஜாமீன் தொகையைக் குறைக்கவேண்டும் என்று அவரது வழக்கறிஞர் எஸ்.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர் ஒரு நபர் உத்தரவாதத்தில் 3,000 ரிங்கிட் ஜாமினில் அவரை அனுமதித்தார் மாஜிஸ்திரேட்.  இந்த வழக்கு விசாரணை மே மாதம் 26-ஆம் தேதி விசாரணைக்கு வருவிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS