இலங்கை தூதர் தாக்குதல்: நீதிமன்றத்தை மாற்றக் கோரிய தூதரின் மனு நிராகரிப்பு!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 20- இலங்கை தூதரை மூன்று இந்திய இளைஞர்கள் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சிப்பாங் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கை கோலாலம்பூருக்கு மாற்றுமாறு அரசு தரப்பு செய்திருந்த மனுவை இங்குள்ள நீதிமன்றம் நிராகரித்தது.

வழக்கு விசாரணைக்காக சிப்பாங் வருவதினால் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் எனவே வழக்கினை கோலாலம்பூரில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என இலங்கை தூதர் இப்ராஹிம் சயிப் அன்சார் மனு வழங்கிருந்தார்.

இதனையடுத்து மனு தொடர்பாக விசாரித்த நீதிபதி நோர்டின் ஹசான், மனுவை ஏற்றுக்கொள்ள போதுமான காரணங்கள் இல்லை எனக் கூறி மனுவை நிராகரித்தார். "இலங்கை தூதரின் மனுவை நீதிமன்றம் ஏற்றாலும் அங்கு வரும் அதே கூட்டம் இங்கேயும் தானே வரும்" என அவர் கூறினார். 

இப்ராஹிம் அன்சாருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்தால் அவர் அமலாக்க பிரிவிடமோ அல்லது போலீசிடமோ அல்லது சிப்பாங் நீதிமன்ற நீதிபதியிடமோ புகார் வழங்கலாம் என நீதிபதி மேலும் கூறினார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை தூதரை தாக்கியதாக கூறி, கலைமுகிலன், பாலமுருகன், மற்றும் ரகுநாதன் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS