கல்வி பரிமாற்றத் திட்டத்தின் கீழ்  2017/2018-ஆம் ஆண்டுக்கான  கல்வி உதவித் தொகை

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்ரவரி 17- இந்தியாவில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் கல்வியைத் தொடர விரும்பும் தகுதிமிக்க மலேசிய மாணவர்கள் இந்திய அரசால் வழங்கப்படும் 2017/2018-ஆம் ஆண்டுக்கான கல்வி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இரண்டு உதவித் தொகையை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழகம், அல்லது கல்லூரி இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து அடிப்படை தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்டிருக்கும் தேவையான அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை இந்தியாவில் கல்வி மேற்கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

பொறியியல், கட்டிட வரைவு, மனிதநேயவியல், கலைக்கல்வி, வர்த்தகம், வணிக மேலாண்மை,  வணிக நிர்வாகம், ஊடகவியல், விடுதி நிர்வாகம், விவசாயம், கால்நடை அறிவியல், கால்நடை பராமரிப்பு, அறிவியல் மற்றும் சட்டத் துறைகளில் கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாறாக, மருத்துவம், பல்மருத்துவம், தாதிமை, உடற்பயிற்சி சிகிச்சை, உணர்விழப்பு, உடை பாவனைகள் போன்ற கல்வித் துறைகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது. 

விண்ணப்பதாரர்கள், இந்தியாவிலுள்ள பல்வேறு, பல்கலைக்கழகங்களின் பட்டியலை அறிய பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையத்தளத்தை பார்க்கவும் . மேலும் அடிப்படை தகுதி மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் துறைகளைப் பற்றி அறிய பல்கலைக்கழக இணையத்தளத்தைப் பார்க்கவும். விண்ணப்ப பாரத்தைப் பூர்த்தி செய்யும்  போது, புள்ளிகளை சதவிகிதத்தில் குறிப்பிடவும். கடப்பிதழின் நகல், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சான்றிதழ்கள்/ எழுத்துப்படிகள் ஆகியவை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். 

மலேசியாவிலிருந்து கல்வியை  மேற்கொள்ளும் ஐ.சி.சி.ஆர்  மாணவர்களின் பல்கலைக்கழகப் பட்டியலைக் காண இந்த இணைப்பைச் www.indianhighcommission.com.my/Pdf/UnivsICCRstusStudying2016-17.pdf சொடுக்கவும். 

இந்த கல்வி உதவித் தொகை விமானக் கட்டணத்தைத் தவிர, கல்விக் கட்டணம், லிவிங் அலவன்ஸ், Contingent Grant உதவித் தொகை, வாடகை வீட்டு உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை போன்றவற்றை வழங்குகிறது. 

தேவையான இணைப்புகளோடு முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு பிரதி விண்ணப்பம் பி.டி.எஃ வடிவில் edu1.kl@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பூர்த்தி செய்யப்பட்ட அச்சுநகலுடன், 5 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை முறையான ஆவணத்தோடு, எதிர்வரும் பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். 

Education Wing (EEP Scholarship),

High Commission of India,

Menara 1 Mon’t Kiara,

Level 28, No. 1, Jalan Kiara,

Mont’ Kiara, 50480 Kuala Lumpur.

Tel: 03 6205 2350 ext 203

Email: edu1.kl@mea.gov.in

Website: www.indianhighcommission.com.my

கல்வி பரிமாற்றத் திட்ட உதவித் தொகையின் விண்ணப்ப  பாரத்தை www.indianhighcommission.com.my/Pdf/EEP2017-18ApplicationForm.pdf என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 

கோலாலம்பூர், பிப்ரவரி 17- இந்தியாவில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் கல்வியைத் தொடர விரும்பும் தகுதிமிக்க மலேசிய மாணவர்கள் இந்திய அரசால் வழங்கப்படும் 2017/2018-ஆம் ஆண்டுக்கான கல்வி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இரண்டு உதவித் தொகையை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழகம், அல்லது கல்லூரி இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து அடிப்படை தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்டிருக்கும் தேவையான அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை இந்தியாவில் கல்வி மேற்கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

பொறியியல், கட்டிட வரைவு, மனிதநேயவியல், கலைக்கல்வி, வர்த்தகம், வணிக மேலாண்மை,  வணிக நிர்வாகம், ஊடகவியல், விடுதி நிர்வாகம், விவசாயம், கால்நடை அறிவியல், கால்நடை பராமரிப்பு, அறிவியல் மற்றும் சட்டத் துறைகளில் கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாறாக, மருத்துவம், பல்மருத்துவம், தாதிமை, உடற்பயிற்சி சிகிச்சை, உணர்விழப்பு, உடை பாவனைகள் போன்ற கல்வித் துறைகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது. 

விண்ணப்பதாரர்கள், இந்தியாவிலுள்ள பல்வேறு, பல்கலைக்கழகங்களின் பட்டியலை அறிய பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையத்தளத்தை பார்க்கவும் . மேலும் அடிப்படை தகுதி மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் துறைகளைப் பற்றி அறிய பல்கலைக்கழக இணையத்தளத்தைப் பார்க்கவும். விண்ணப்ப பாரத்தைப் பூர்த்தி செய்யும்  போது, புள்ளிகளை சதவிகிதத்தில் குறிப்பிடவும். கடப்பிதழின் நகல், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சான்றிதழ்கள்/ எழுத்துப்படிகள் ஆகியவை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். 

மலேசியாவிலிருந்து கல்வியை  மேற்கொள்ளும் ஐ.சி.சி.ஆர்  மாணவர்களின் பல்கலைக்கழகப் பட்டியலைக் காண இந்த இணைப்பைச் www.indianhighcommission.com.my/Pdf/UnivsICCRstusStudying2016-17.pdf சொடுக்கவும். 

இந்த கல்வி உதவித் தொகை விமானக் கட்டணத்தைத் தவிர, கல்விக் கட்டணம், லிவிங் அலவன்ஸ், Contingent Grant உதவித் தொகை, வாடகை வீட்டு உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை போன்றவற்றை வழங்குகிறது. 

தேவையான இணைப்புகளோடு முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு பிரதி விண்ணப்பம் பி.டி.எஃ வடிவில் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பூர்த்தி செய்யப்பட்ட அச்சுநகலுடன், 5 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை முறையான ஆவணத்தோடு, எதிர்வரும் பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். 

Education Wing (EEP Scholarship),

High Commission of India,

Menara 1 Mon’t Kiara,

Level 28, No. 1, Jalan Kiara,

Mont’ Kiara, 50480 Kuala Lumpur.

Tel: 03 6205 2350 ext 203

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Website: www.indianhighcommission.com.my

கல்வி பரிமாற்றத் திட்ட உதவித் தொகையின் விண்ணப்ப  பாரத்தை www.indianhighcommission.com.my/Pdf/EEP2017-18ApplicationForm.pdf என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 

BLOG COMMENTS POWERED BY DISQUS