ஆவணங்கள் இல்லாததால் பள்ளிக்குச்  சேர்ப்பதில் சிக்கலா? என்ன செய்யலாம்? -(VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்,17- முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத நிலையில், பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு தற்காலிகமாக கல்வி அமைச்சு வாய்ப்புத் தந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அது சிக்கலாகிவிடும் என்று 'டிரா மலேசியா' (DHRRA MALAYSIA) எனப்படும் அரசு சாரா சமூக இயக்கம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு, கடைசித் தருணம் வரைக் காத்திருக்காமல், பள்ளி தொடங்குவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே அதற்கான வழிமுறை அறிந்து கொண்டு கல்வி இலாகாவில் பதிவுசெய்து கொண்டால் போதுமான ஆவணங்கள் இல்லாத நிலையிலும் பிள்ளைகளின் கல்வி தடைபடாமல் இருக்கும் என்று டிரா மலேசியாவின் நிர்வாகி மணிவண்ணன் கந்தசாமி கூறினார்.

முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கலை எதிர்நோக்குபவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய 'டிரா மலேசியா' தயாராக இருக்கிறது என்று அவர் சொன்னார். 

இது தொடர்பாக 'வணக்கம் மலேசியா'வுக்கு மணிவண்ணன் அளித்த காணொளி நேர்காணலை இங்கே காணலாம்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS