BR1M 2017 : 50 லட்சம் விண்ணப்பங்கள் அங்கீகாரம் 

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்ரவரி  17-   இவ்வாண்டு BR1M எனப்படும்  ஒரே மலேசியா உதவித் தொகை திட்டத்திற்கு இவ்வாண்டு  மொத்தம்,  5,153,238 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.  

அதே நேரத்தில், மேலும்  3,123,950  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதன் முடிவுகள் அடுத்த மாதம் தெரிய வரும் என்றும் தெரிவித்தார். 

"வயது வரம்பைப் பொறுத்தவரை 21 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 61 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.  இவர்களில்  2,789,799 விண்ணப்பதாரர்களுக்கு 1200 ரிங்கிட்  உதவித் தொகையும், 243,434 பேருக்கு 900 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்பட்டது. அதே நேரத்தில், 2,127, 005 பேர்  450 ரிங்கிட் பெற தகுதி பெற்றுள்ளனர் என அவர்  தமது www.najibrazak.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS