கொழும்பு சென்ற எம்.எச் 179 விமானத்தில் இயந்திரக் கோளாறு  

சமூகம்
Typography

புத்ராஜெயா,  பிப்ரவரி 17 -  நேற்றிரவு 10.10 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்சுக்குச் சொந்தமான   எம்.எச் 179 விமானம்,  திடீர் மின்சார துண்டிப்பு காரணமாக,  திரும்பவும் கோலாலம்பூருக்கே திரும்பியது. 

கடல் பகுதியைக் கடந்துக் கொண்டிருந்த போது மின்சார சேமிப்பு  பாகம் செயலிழந்ததால், அதனை மீண்டும் உயிர்ப்பிக்க  வேண்டியிருந்ததால் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே  திருப்பிவிடப்பட்டது. 

இதனையடுத்து, அதிகாலை 1.50 மணிக்கு,   கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் அருகிலுள்ள விடுதியில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டனர்.  பின்னர் இந்த விமானப் பயணம், இன்று 3.30 மணிக்கு மீண்டும் புறப்பட்டது. MH179D என்ற அந்த விமானம் மாலை 4.35 மணிக்கும் கொழும்பு விமான நிலையத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, அங்கிருந்து மீண்டும் கிளம்பும் MH179D விமானம் கொழும்பிலிருந்து மாலை 5.10 மணிக்குக் கிளம்பி இரவு 11.20 மணிக்கு கோலாலம்பூரை வந்து சேரும் ' என மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS