கிம் படுகொலை: மரபணு மாதிரி கிடைக்கும் வரை சடலத்தை ஒப்படைக்கப்படாது- போலீஸ் 

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்ரவரி 17-  விஷத் திரவம் தெளிக்கப்பட்டு மரணமடைந்த  கிம் ஜொங் நாம்-மின்  உடலை மரபணு மாதிரி கிடைக்கும் வரை மலேசியா ஒப்படைக்காது. 

"இதுவரை கிம் ஜொங் நாம்-மின் உறவினர் யாருமே அவரது உடலை அடையாளம் காணவோ, பெற்றுக்கொள்ளவோ முன் வரவில்லை. இறந்தவரது சடலத்தை உறுதி செய்துகொள்ள எங்களுக்கு மரபணு மாதிரி வேண்டும் " என சிலாங்கூர் மாநில  போலீஸ் படைத் தலைவர் அப்துல் சாமா மாட் தெரிவித்தார்.   

"சடலத்தைப் பெற்றுக்கொள்வதாக வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது.  எனினும், சடலத்தை ஒப்படைப்பதற்கு முன், அந்த சடலம் யாருடையது என்பதை நாம் அடையாளம் காண வேண்டியுள்ளது " என அவர் தெரிவித்தார். 

கடந்த திங்கட்கிழமை, கோலாலம்பூர் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்தில் இரு  பெண் உளவாளிகளால் விஷத் திரவம் தெளிக்கப்பட்டு மரணமடைந்தவர், வடகொரிய அதிபர் கிம்  ஜொங் யுன்னின் சகோதரர் என துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி உறுதிபடுத்தினார்.

அதே நேரத்தில், வடகொரியாவின் கோரிக்கைக்கு இணங்க சடலத்தை ஒப்படைக்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS