ஜோர்ஜ்டவுன், பிப்.17- பினாங்கு தைப்பூசத்தில் பெரும் சர்ச்சையாக விளங்கிய தங்க ரதத்தின் தைப்பூச உண்டியல் பணம் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உண்டியல் பணத்தை எண்ணி வருகிறது.
அண்மையில் பினாங்கு தைப்பூசத்தில் வெள்ளி ரதத்தோடு தங்க ரதமும் வீதி உலா வந்தது. முன்னதாக, செட்டியார் சமூகத்தினர் வெள்ளி ரதம் ஊர்வலத்தின் கணக்குகளை முறையாக காட்டுவதில்லை என அறப்பணி வாரியம் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், பினாங்கு கொம்தாம் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தங்க ரத ஊர்வலத்தில் வசூலிக்கப்பட்ட உண்டியல் பணம் எண்ணப்பட்டது. பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தோடு அரசு அதிகாரிகளும் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இவர்களுக்கு துணையாக சில அரசு சாரா இயக்கங்களும் பணம் எண்ண உதவினர்.
வெளிப்படையாக மற்றவர்கள் காணும் வகையில் உண்டியல் பணம் எண்ணப்பட வேண்டும் என்பதாலேயே அரசு சாரா இயக்கங்களும் உண்டியல் எண்ண அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று மதியம் வரை பணம் எண்ணும் பணி தொடரும் என்பதால் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்டனர்.
பினாங்கு தங்க ரத உண்டியல் பணம் எண்ணப்படுகிறது!
Typography
- Font Size
- Default
- Reading Mode