கிம் படுகொலை:KLIA, KLIA2 மற்றும் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு  

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்ரவரி 17- கடந்த திங்கட்கிழமை  வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜொங் நாம் கோலாலம்பூர், இரண்டாவது விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் 2-வது அனைத்துலக விமான நிலையம், ஆகியவற்றில்  தீவிர கண்காணிப்பு ,மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ அப்துல் சாமாஹ் மாட் தெரிவித்தார். 

அந்த வகையில் விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடம்  தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் மூலம், இச்சம்பவத்தில் சம்பவத்தில்  தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முடியும். இவ்விவகாரத்தைப் போலீசார்   பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து வருவதோடு,  இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர். 

கடந்த திங்கட்கிழமை, கோலாலம்பூர் இரண்டாவது விமான நிலையத்தில்,  கிம் ஜொங் நாம் இரு பெண் உளவாளிகளா விஷத் திரவம் தெளிக்கப்பட்டு  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைத்துலக நிலையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS