ஜொங் நாம்-க்கு இரு அடையாளங்கள்; ஆவணங்களை ஒப்படைத்தது புத்ராஜெயா மருத்துவமனை

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.17- கேஎல்ஐஏ 2-இல் கொல்லப்பட்ட வட கொரியா தலைவரின் சகோதரர் கிம் ஜோங் நாம்மின் அடையாள ஆவணங்களை புத்ராஜெயா மருத்துவமனை சிப்பாங் போலீசிடம் ஒப்படைத்தது. 

கடந்த திங்கட்கிழமை, கிம் ஜோங் நாம் விமான நிலையத்தில் தாக்கப்பட்ட பிறகு அவர் புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். பின்னரே பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால், கிம் ஜோங் நாம்மின் பொருட்கள் யாவும் புத்ராஜெயா மருத்துவமனையிலேயே இருந்தன.

இதனை அடுத்து, நேற்று மருத்துவமனை கிம் ஜோங் அடையாள ஆவணங்களையும் அவருடன் இருந்த பொருட்களையும் போலீசிடம் ஒப்படைத்தது. அதில் ஒரு சிவப்பு நிற கடப்பிதழும் மூன்று நீல நிற கடப்பிதழும் இருந்தன. கிம் ஜோங் நாம் அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுபவர் என்பதால் இவருக்கு இத்தனை கடப்பிதழ்கள் இருந்திருக்கலாம் என போலீசார் கூறினர். 

மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பண நோட்டுகளையும் பற்று அட்டைகளையும் மற்றும் சில பொருட்களையும் போலீசார் பெற்றுக் கொண்டனர். 

இந்நிலையில், கொல்லப்பட்ட கிம் ஜோங் நாம்மிற்கு இரு அடையாளங்கள் இருந்ததாகவும் கிம் சோல் என்று கடப்பிதழில் இருந்ததும் அவரின் உண்மையான அடையாளம் தான் போலி அல்ல என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. 

கிம் ஜோங் நாம்மின் உறவினர் வந்த பிறகு அவர்களிடம் கிம்மின் உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS