கெடா அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு ஊதியம்!

சமூகம்
Typography

அலோர்ஸ்டார், நவ.13- கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சிறப்பு ஊதியமாக 500 ரிங்கிட் வழங்கப்படும் என்று மந்திரிபுசார் டத்தோஶ்ரீ அகமட் பாஷா ஹனிபா அறிவித்துள்ளார்.

மாநில சட்டமன்றத்தில் 2017ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்தத் தொகையை கிட்டத்தட்ட 6,090 கெடா மாநில அரசு ஊழியர்கள் பெறவுள்ளனர்.

மொத்தம் 30 லட்சம் ரிங்கிட் வரை சிறப்பு ஊதியமாகத் தரப்படும் என இன்று காலை நடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மந்திரிபுசார் குறிப்பிட்டார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS