1.27 மில்லியன்  கையெழுத்துகள்: நானே மாமன்னரிடம் ஒப்படைப்பேன்-துன் மகாதீர் 

சமூகம்
Typography

கோலாலம்பூர்,  14 மே-  மக்கள் தீர்மானம் மூலம் நாடு தழுவிய அளவில் திரட்டப்பட்ட  1.27 மில்லியன்  கையெழுத்துக்களைத் தாமே  மாமன்னரிடம் ஒப்படைக்கப்போவதாக  நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது  கேட்டுக்கொண்டார்.   

அதற்கான  ஒப்புதலை  மாட்சிமை  தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்  ஹலிம் முவாட்சாம் ஷா-விடமிருந்து பெறும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

 நடப்பு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து  இறக்கும் வகையில்  இந்த மக்கள் தீர்மானத்தை துன் டாக்டர் மகாதீர் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS