கெட்கோ  குடியேற்றக்காரர்களின் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்ததா?

சமூகம்
Typography

புத்ராஜெயா, ஏப்ரல்.16- நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தங்களின் நிலத்தின் உரிமைக்காக போராடிய 140 கெட்கோ குடியேற்றக்காரர்களின் 6 ஆண்டுக் கால சட்டப் போராட்டம் இன்றுடன் ஒரு முடிவுக்கு  வருவதாக கருதப்படுகிறது.

கெட்கோ குடியேற்றக்காரர்களின் புகார் வழக்கை செவிமடுக்க கூட்டரசு நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, அவர்களின் போராட்டம் நிறைவுக்கு வருகிறது. 

கெட்கோ குடியேற்றக்காரர்களின் சட்ட ரீதியிலான கேள்விகள், 1964-ஆம் ஆண்டின் நீதிபதிகள் சட்டத்தின் 96-ஆவது பிரிவின் கீழ் உட்படவில்லை என்பதால், அவர்களின் புகாரை செவிமடுக்க மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு நிராகரிப்பதாக தலைமை நீதிபதி ரவூஸ் ஷாரிஃப் கூறினார். 

“ஒரு வழக்கை முழு விசாரணைக்கு பிறகு தள்ளுபடி செய்யலாம். அல்லது அந்த வழக்கை விசாரிக்காமல் தள்ளுபடி செய்யலாம். இந்த வழக்கை விசாரிக்க அவசியம் இல்லை என்று நீதிபதிகள் கருதி விட்டனர்” என்று ரவூஸ் ஷாரிஃப் மேலும் கூறினார். 

அந்த நிலங்கள் மீது தங்களுக்கு உரிமை உண்டு என்று கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் விவாதிக்க முடியாது. அவர்கள் அந்த நிலங்களின் உரிமையாளர்கள் அல்ல என்பது நிரூபணமாகி விட்டது. 

கெ.ஜெயபாலசிங்கம், யொங் யூன் ஷிங் மற்றும் தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு, அந்த 140 கெட்கோ குடியேற்றக்காரர்களும் ரிம.10,000 (தலா) வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

BLOG COMMENTS POWERED BY DISQUS