ஷா ஆலாம், ஏப்ரல்.16- தனது பிறந்த நாளன்று, சக மாணவர்களால் இடைநிலைப் பள்ளி மாணவர் ஒருவர் துடைப்பத்தால் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அச்சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரணையை தொடங்கியுள்ளது.
பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, கல்வி அமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், இச்சம்பவம் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது என்றும், அது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் கூறினார். “அச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது” என்று அவர் சொன்னார்.
பிறந்த நாளை கொண்டாடும் மாணவர் ஒருவருக்கு அப்பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடிய பின்னர், அந்த எண்மரும் அம்மாணவரை துடைப்பத்தால் அடித்து தாக்கும் வீடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலானது என்பது குறிப்பிடத் தக்கது.
மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சக மாணவர்கள்- கல்வி அமைச்சு விசாரணை!
Typography
- Font Size
- Default
- Reading Mode