காரில் இருந்த மகளை மறந்து வேலைக்குச் சென்ற தாய்; சிறுமி மரணம்; போர்ட்டிக்சனில் சம்பவம்!

சமூகம்
Typography

சிரம்பான், மார்ச் 14- வேலை செய்யும் இடத்திற்கு தன் இரண்டு வயது மகளை அழைத்துச் சென்ற தாய், மகள் காரில் இருப்பதை மறந்து அலுவலகம் சென்றதால் அச்சிறுமி பலியான துயரச் சம்பவம் போர்ட்டிக்சனில் நடந்துள்ளது.

இன்று காலையில் 9 மணிக்கு இங்குள்ள கல்லூரி ஒன்றில் வேலை பார்க்கும் பெண், தனது இரண்டு வயது மகளைத் தன் வேலை இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், காரிலிருந்து இறங்கிய மாது, காரில் பிள்ளை இருப்பதை மறந்து காரைப் பூட்டி விட்டு அலுவலகம் சென்று விட்டார்.

பிற்பகல் 1 மணியளவில் தன் மகள் தன்னுடன் வந்ததை உணர்ந்த பெண், காருக்கு ஓடி சென்று பார்த்தப்போது அச்சிறுமி மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளார். 

பதறிபோன பெண், தன் மகளைத் தூக்கி கொண்டு அருகில் இருந்த போர்ட்டிக்சன் சுகாதார கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் ஜைனுடின் அமாட் உறுதிப்படுத்தினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS