'சாலையில் வம்புக்கு இழுக்கும் நோக்கோடு என்னை விரட்டி வந்தார்கள்'; கோகி சின்னையாவின் VIDEO!

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச் 14- "என் காரைப் பின் தொடர்ந்து வந்தவர்கள், சாலையில் வம்புக்கு இழுக்கும் நோக்கத்தோடு தான் என்னை விரட்டி வந்தார்கள்" என கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள் பற்றி போலீஸ் தொடர்பாக நேற்று முன்தினம் கண்ணீரோடு காணொளி வெளியிட்டிருந்த கோகி சின்னையா மீண்டும் மற்றுமொரு காணொளி வழி பேசியுள்ளார்.

இரண்டாவது காணொளியில் கோகி சின்னையா (வயது 14) கூறியதாவது, "நான் சாலையில் செல்லும்போது பின்னால் வந்த காரின் சாலையில் என்னுடைய கார் பாதி சென்று விட்டதாக (makan jalan) சம்பந்தப்பட்ட காரில் இருந்தவர்கள் கூறியதாக என்னைத் தொடர்பு கொண்ட பெண் போலீஸ் கூறினார்."

   ###காணொளி: நன்றி facebook

"அது ஒருவேளை நடந்திருக்கலாம். நான் சென்ற சாலை இருட்டாக இருந்தது. மேலும், அங்கு சாலை பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அதனால், நான் சாலையில் செல்லும்போது அவர்களின் வழித்தடத்திற்கு தவறுதலாக சென்றிருக்கலாம். ஆனால் அவர்களின் காரை நான் இடிக்கவில்லை."

"நான் தவறு செய்திருந்தாலும் காரினை நான் இடிக்காத நிலையில், அவர்கள் என்னை பின் தொடர்ந்து வந்தது 'ரோட் புல்லிங்' எனப்படும் சாலை ரவுடித்தனம் செய்வது போல் இருந்தது. சாலையில் வம்புக்கு இழுக்கும் எண்ணத்தோடு அந்த காரில் இருந்தவர்கள் என் காரைப் பின் தொடர்ந்தனர்" என்று கோகி அந்த காணொளியில் கூறியுள்ளார்.

மேலும், போலீஸ் நிலைய வாசலில் தாம் முகப்பு அதிகாரியிடம் பேசும் போது அவர் உள்ளே எட்டி என் காலைப் பார்த்தார் எனவும் கோகி காணொளியில் கூறியுள்ளார்.

முன்னதாக, முதல் காணொளியில் போலீஸ் தனக்கு முறையான சேவை வழங்கவில்லை என கோகி கூறியிருந்தார். இதனையடுத்து, பிஎம்டபள்யூ காரில் பின் தொடர்ந்த அந்த மூன்று 18 வயது இளைஞர்களையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS