தமிழோடு வாழ்வோம்; மலேசியத் தமிழர்கள் தாய்மொழித் தினத்தில் உறுதி! (VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.21- மலேசியாவில் 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக கட்டிக் காக்கப்பட்டு வரும் தமிழைப் போற்றவும் அதன் வளர்ச்சிக்கு படிக்கல்லாக அமையும் வகையில் நாடு முழுவதும் தாய்மொழி தினத்தைத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தங்களின் இன அடிப்படையில் உலகத்தினர் உலக தாய்மொழி தினத்தைக் கொண்டாடும் நிலையில், தமிழ்மொழியின் மேன்மையைப் போற்றும் வகையில் மலேசியத் தமிழர்களும் இந்நாளைச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

நம் மூதாதையர் நமக்கு அளித்த வரமான தமிழை வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையினருக்கு முறையாக கொண்டு செல்லவேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதிப்பாட்டுடன் இருக்கின்றனர்.

தமிழ்ப்பள்ளியில் மட்டுமின்றி வீட்டிலும் தமிழிலே பேசவேண்டும் என்ற விழிப்புணர்வும் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் ஓங்கி நிற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. 

இளைய தலைமுறையினர் தாய்மொழியின் அவசியத்தை உணர்ந்து மற்றவர்களும் இந்த விழிப்புணர்வை பெறும் வகையில் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் பல்வேறு காணொளிகளையும் தமிழ் கூறு புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வருவதும் வரவேற்கத்தக்கதே.

நாடு தழுவிய அளவில் மலேசிய பொது அமைப்புகளும் ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளும் தாய்மொழி தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடும் ஏற்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS