60'களின் தேசிய கோல்கீப்பர் கியோங் மரணம்; பிரதமர் அனுதாபம்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.21- 1960ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மலேசியாவின் சிறந்த கோல்கீப்பராக விளங்கிய முன்னாள் தேசிய கால்பந்து விளையாட்டாளர் சவ் சீ கியோங் இன்று காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது ஆழ்ந்த அனுதாபத்தைட்ன் தெரிவித்துக் கொண்டார்.

60ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் கால்பந்தாட்ட விளையாட்டில் மிக சிறந்த கோல்கீப்பராக விளங்கியவர் சவ் சீ கியோங். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.

சீ கியோங் காலமானதை அடுத்து டிவிட்டர் பக்கத்தில் நஜிப் தனது அனுதாப செய்தியை வெளியிட்டிருந்தார். அதில், "முன்னாள் தேசிய கோல்கீப்பர் சவ் சீ கியோங் மரணமடைந்த செய்தி கிடைத்தது. அவர் மலேசியாவின் கால்பந்து துறையின் சகாப்தம் மட்டுமல்ல தொடர்ந்து ஐந்து வருடங்கள் ஆசியாவின் சிறந்த கோல்கீப்பராகவும் விளங்கியவர். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்திருந்தார்.

சவ் சீ கியோங், ஆசியான் கால்பந்து கூட்டரசால் 1966 முதல் 1970ஆம் ஆண்டு வரை சிறந்த கோல்கீப்பராக தேர்ந்தெடுக்கபட்டவர். பின்னர் ஹாங்காங்கில் நிபுணத்துவ கால்பந்து விளையாட்டாளராகவும் வரலாறு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS