தைப்பூசம்: நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு அதிகரிப்பு! - ஐஜிபி

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.22- தைப்பூச விழாவை முன்னிட்டு  போலீசார் தங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உள்ளனர்.  தைப்பூசத்தின்  போது எத்தகைய விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்காமல் இருக்க, நாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும்  பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று போலீஸ் படைத்தலைவர் டான்ஶ்ரீ முகம்மட்  ஃபுஸி தெரிவித்தார்.

திருவிழா சுமூகமான முறையில் நடந்தேற  விழாவுக்கு வரும் அனைத்துத் தரப்பினரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

மேலும் தைப்பூசத்தின் போது  நிகழ்வுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எதுவும் நடக்கக்கூடிய  சாத்தியங்கள் குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தி ருந்தால் அவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்ய முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS