சிறுமி மானபங்கம்; 'அவனை' விடாதீர்கள்!  வலைத்தளங்களில் மக்கள் ஆவேசம்! 

சமூகம்
Typography

சுங்கைப்பட்டாணி, ஜன.22- சிறுமி ஒருவரை மடியில் உட்கார வைத்துக் கொண்டு மானபங்கம் செய்த நபர் பற்றிய காணொளி ஒன்று  சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து மக்களிடையே அதிருப்தியும் ஆத்திரமும் பரவியிருக்கும் நிலையில், அந்த நபரை கைது செய்ய போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர்.

சுங்கைப்பட்டாணியில் தாமான ரியாவில் கடந்த 20 ஆம் தேதி இச்சமபவம் நடந்ததாக இந்தக் காணொளியை முதலில் வெளியிட்ட டுரியான் மீடியா முகநூல் பக்கம் கூறியிருந்தது.  அதே வேளையில் இது பற்றி இதுவரை எந்தவொரு போலீஸ் புகாரும் செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்திருந்தது.

எனினும், 7 வயதுடைய அந்தச் சிறுமியின் தாயார் இது குறித்து இன்று பிற்பகல்,  போலீசில் புகார் செய்துள்ளதாக கோல மூடா போலீஸ் தலைவர் சாய்ஃபி அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.

தொடக்க விசாரனைகளில் இருந்து இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கும் 1 மணிக்கும் இடையே இங்கு நடந்த கேளிக்கை சாந்தை நிகழ்ச்சி ஒன்றின் போது நடந்திருப்பதாக அவஎ சொன்னார்.

2017ஆம் ஆண்டின் சிறார்கள் சட்டத்தின் பாலியல் குற்றங்கள் பிரிவு 14(ஏ)-இன் கீழ் இந்தச் சம்பவம் குறித்து புலன் விசாரணையை தாங்கள் தீவிரப்படுத்தி இருப்பதாக  சாய்ஃபி அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

இதனிடையே இந்தக் காணொளி, வலைத் தளவாசிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நபரை கண்டுபிடித்து கைது செய்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்துரைத்துள்ளனர். 

இந்த நபருக்கு போது இடத்தில் வைத்து தண்டனை நிறைவேற்றவேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர். இந்த ஆசாமி, இனிமேலும் இத்தகைய குற்றங்களை செய்ய முடியாத வகையில் ஆண்மையை இழக்கும்படி செய்யப்பட வேண்டுமென்றும் சிலர் கருத்துக் கூறியுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS