சிறுமியிடம் தகாத செயல்: காணொளியைப் பகிராதீர்கள்! வலைத்தள வாசிகளுக்கு கோரிக்கை

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன. 22- சிறுமியிடம் தகாத செயலில் ஒரு நபர் ஈடுபடும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்றை சமூக ஊடகத்தினர் பகிர்வதை நிறுத்திக் கொண்டு, அந்தச் சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார்களைச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப் பட்டிருக்கிறது.

சுங்கைப் பட்டாணியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து  பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பரப்பிக் கொண்டிருக்காமல்,  பொறுப்புள்ள வகையில் நடந்து கொள்ளுமாறு அவர்களுக்கு முகநூல் பதிவு ஒன்றில் சமூகப் பணியாளரான சையட் அஸ்மி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்த இடம்,  மற்றும் அதில் சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க பலவழிகளில் முயன்று வருகிறேன். சம்பந்தப்பட்டவர் யார், எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. அந்தச் சிறுமி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம் என்று வலைத் தளவாசிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். 

சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபடும்  ஆசாமி பற்றிய அந்தக் காணொளியில், சிறுமியின்ன் முகம் மறைக்கப்படாமலேயே பதிவேற்றப்பட்டிருப்பது வேதனை தருகிறது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தக் காணொளியை முதலில் முகநூலில் டுரியான் மீடியா என்ற தரப்பால் பதிவிடப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவம் சுங்கைப் பட்டாணி தாமான் ரியாவில் நடந்ததாக அதில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இந்தச் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு இதுவரை எந்தவொரு புகாரும்  கிடைக்கவில்லை என்று பெடரல் போலீஸ் தொடர்புத் துறை தலைவர் டத்தோ அஸ்மாவதி அகமட் தெரிவித்தார். எனினும், இந்தக் காணொளி குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS