பினாங்கு லிட்டல் இந்தியாவில் பொங்கல் திருநாள் களை கட்டுகிறது! 

சமூகம்
Typography

ஜோர்ஜ் டவுன், ஜன.13- இன்று போகிப் பண்டிகையை கொண்டாடும் நிலையில் விட்டு, நாளை பொங்கள் திருநாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு, பல தமிழர்கள், பினாங்கின் லிட்டல் இந்தியா பகுதிக்கு வந்த வண்ணமாக உள்ளனர்.  

தமிழர்களின் திருநாள் என்று கொண்டாடப்படும் பொங்கல் திருநாளுக்கு தேவையான மண்பானைகள், தோரணங்கள், கரும்புகள் போன்றவற்றை வாங்கும் பொருட்டு, பொதுமக்கள் லிட்டல் இந்தியாவிற்கு படை எடுத்துள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது. 

"பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நான் 3,000 மண்பானைகள் மற்றும் 6,100 கரும்புகளை ஆர்டர் செய்துள்ளேன். மண்பானையை உபயோகிக்க விரும்பாத மக்களுக்காக சில்வர் ரகப் பானைகளையும், 10,000 பால் போத்தல்களையும் ஆர்டர் செய்துள்ளேன். 

ஆர்டர் செய்த கரும்புகளில், கிட்டத்தட்ட 3,800 கரும்புகளை நான் விற்பனை செய்து விட்டேன்" என்று பி.மாதவன் ஸ்டோர்ஸ் விற்பனை அதிகாரி கே.லோகேஸ்வரன் கூறினார். 

பொங்கல் திருநாளன்று ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் உபயோகிப்பது மரபு அல்ல. அதனால்தான், லிட்டல் இந்தியாவில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது என்று மருந்தக உதவியாளரான ஆர்.தனம் (வயது 42) சொன்னார். 

தை மாதத்தின் முதல் நாளன்று, தமிழர்கள் பொங்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தப் பொங்கள் பண்டிகையானது, மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

நாளை காலை 6 மணியிலிருந்து காலை 9 மணி வரை, காலை 11.30 மணியிலிருந்து மதியம் 1 வரை மற்றும் மதியம் 4 மணியிலிருந்து 5.30 மணி வரை, மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடலாம்.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS