கோழிகள் மீது ஏறி விளையாடிய எலிகள்! மார்க்கெட்டில் நகராண்மை எலி வேட்டை!!

சமூகம்
Typography

புக்கிட் மெர்தாஜாம், ஜன.12- இங்குள்ள ஜாலான் பசார் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோழிகள் மீது எலிகள் ஏறி விளையாடிக் கொண்டிருந்த விவகாரம் பரபரப்பானதைத் தொடர்ந்து செபராங் பிறை நகராண்மைக் கழகம் எலி ஒழிப்பு வேட்டையை மேற்கொண்டது. 

நகராண்மைக் கழகத்தைச் சேர்ந்த சுகாதாரம், கால்நடை மாற்றும் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இந்த நடவடிக்கையைத் தொடங்கினர். இவர்கள் மூன்று புகைப் பாய்ச்சும் இயந்திரங்கள் மற்றும் நீண்ட கடினமான பிளாஸ்டிக் பைப்புகளுடன் எலி வேட்டையை நடத்தினர்.

முதலில் எலிகள் பதுங்கி இருக்கும் பொந்துகளுக்குள் புகையைப் பாய்ச்சிய பின்னர்  அவர்றை அடைத்து வைத்து விட்டு சிறிது நேரம் கழித்த பின்னர் மீண்டும் அதனைத் திறந்த போது அதற்குள் பதுங்கியிருந்த எலிகள் பதறியடித்துக் கொண்டு வெளியேறின.

அந்தத் தருணத்தில் வெளியே கையில் பிளாஸ்டிக் பைப்புகளுடன் காத்திருந்த ஊழியர்கள் அவற்றைத் தாக்கி அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த முயற்சியின் போது அடிபட்ட எலிகளைக் காட்டிலும், தப்பியோடி வேறு இடங்களில் பதுங்கி கொண்ட எலிகளே அதிகம் .

மார்க்கெட்டில் இந்த எலித் தொல்லைகள் குறித்து ஏற்கெனவே பலமுறை மாநகராட்சிக்கு மக்கள் புகார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS