பள்ளிக்குச் செல்லும் போது விபத்து; சந்திரன்,  சிவசங்கிரி, ரவணன், சாந்தி படுகாயம்!

சமூகம்
Typography

ஜாசின், ஜன.12- இன்று காலை மெர்லிமாவ் தமிழ்ப் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நடந்த சாலை விபத்தில் டி.சந்திரன் (வயது 51) மற்றும் அவருடைய 3 பிள்ளைகளான சிவசங்கரி (வயது 12), ரவணன் (வயது 8) மற்றும் சாந்தி (வயது 7) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

மெர்லிமாவ், கம்போங் பாயா பூலோ என்றை இடத்தைச் சேர்ந்த சந்திரன் தனது 3 பிளளைகளையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் ஒன்று அவர்களை மோதித் தள்ளியதோடு இதர இரு கார்கள் மீதும் மோதியது.

அந்தக் காரில் வந்த 18 வயதுடைய ஓட்டுனரும் படுகாயமடைந்தார். இதில் மூன்று பிள்ளைகளும் தலையிலும் உடலிலும் கடுமையாக காயமடைந்த வேளையில் பிள்ளைகளின் தந்தை சந்திரன் நெஞ்சில் கடுமையான காயத்திற்கு உள்ளானார். 

இவர்கள் அனைவரும் மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டியதாக 1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் இந்தச் சம்பவத்தைப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

.

BLOG COMMENTS POWERED BY DISQUS