இறந்து பிறந்த குழந்தையை மறைக்க முயன்ற இளம் ஜோடிக்கு  சிறை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.12- தங்களுக்குக் குழந்தை பிறந்ததை மூடி மறைக்கும் பொருட்டு குழந்தையின் உடலை அப்புறப்படுத்த முயன்ற ஓர் இளம் ஜோடிக்கு 12 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தங்கள் மீதான குற்றச்சாட்டை ஃபைசால் சைட் (வயது 20) என்ற இளைஞரும்  நூர் ஃபிட்ரி இரியானி (வயது19) என்ற இளம் பெண்ணும் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்.

தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது போது கண்ணீர் விட்டு அழுதனர்.

சம்பந்தப்பட்ட இளம் பெண்ணுக்கு கழிவறையில் குழந்தை பிறந்த போது அது இறந்தே பிறந்ததாக தெரிகிறது. பின்னர் இறந்த குழந்தையின் உடலை  சம்பந்தப்பட்ட நபருடன் சேர்ந்து அப்புறப்படுத்தி மறைக்க முயன்றதாக கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் தங்களின் படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றும் கூறிய, இந்த ஜோடி தங்களுக்கு கருணை காட்டுமாறு நீதிமன்றத்தைக் கேட்டு க் கொண்டனர்.

எனினும், பிராசிகியூசன் தரப்பு  இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. பின்னர் இவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS