ஸாயிட்டைக் கண்டித்தார் சிலாங்கூர் சுல்தான்!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், டிச.7- பொதுமக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக சில அரசியல்வாதிகள் இன, மதப் பேதத்தைச் சார்ந்தே செயல்படுகின்றனர் என்றும் அது தவறான செயல் என்று 'தி ஸ்டார்' என்ற நாளேடில் வெளியான சிறப்பு பேட்டியில் சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் கூறியதை விமர்சிக்கும் வகையில் தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் ஜ.செ.க உறுப்பினரான முன்னாள் அமைச்சர் டத்தோ ஸாயிட் இப்ராஹிம் கருத்து ஒன்றை பதிவிட்டிருப்பது குறித்து சிலாங்கூர் சுல்தான் கோபம் தெரிவித்துள்ளார்.   

ஸாயிட்டின் அந்தச் செயலால் தாம் வருத்தம் மற்றும் கோபம் அடைந்துள்ளதாக சுல்தான் ஷராஃபுடின் கூறினார்.  

"தேவையில்லாமல் கருத்து தெரிவிக்கும் முன்பு, முதலில் நான் என்ன சொன்னேன் என்று ஸாயிட் முறையாக படிக்குமாறு நான் அறிவுறுத்துகிறேன். ஸாயிட் சிலாங்கூரில் வசிக்கிறார்.

அவர் வேண்டுமானால், சொந்த மாநிலமான கிளாந்தான் மாநிலத்திற்கு திரும்பிச் செல்லலாம். அங்குப் பெரிய வீடொன்றை கட்டிக் கொண்டு, கிளந்தான் மக்களுக்கு அவர் உதவி செய்யலாம். சிலாங்கூரில் பிழைக்கும் வழித் தேட வேண்டாம்" என்று சுல்தான் ஷராஃபுடின் கோபத்துடன் தெரிவித்தார். 

அந்த நாளேடுக்கு தாம் அளித்த பேட்டியில், அரசியல் இல்லை; மாறாக, சிலாங்கூர் ஆட்சியாளர் என்ற அடிப்படையில், தாம் அவ்வாறு கருத்துரைத்த்தாகவும், தனக்குப் பாடம் எடுப்பதை விட்டு விட்டு வேறு வேலையைப் பார்க்குமாறு சிலாங்கூர் சுல்தான் ஸாயிட்டுக்கு அறிவுறுத்தினார். 

"நான் கூறுவதை எல்லாம் திரித்துக் கூறுவதே ஒரு பொழுதுபோக்காக ஸாயிட் கொண்டிருக்கிறார். பல காலங்களாக அரச குடும்பத்திற்கு எதிராகவே அவர் கருத்து தெரிவித்து வந்துள்ளார் என்பதையும் நான் அறிவேன். அவர் எங்கிருந்து வந்தார் என்பதை அவர் மறந்து விடக்கூடாது என்று நான் அவருக்கு நான் நினைவுறுத்துகிறேன்" என்று அவர் சொன்னார். 

நாடே பற்றி எரியும் போது, எல்லாரும் பாதிக்கப்படுவர். ஆதலால், சிலாங்கூர் சுல்தான் வார்த்தைகளை விட்டு விடாமல், அவர் பேசும் போது கவனமாக பேசவேண்டும் ஸாயிட் தனது டுவிட்டர் பக்கத்தில் 'டிவிட்' செய்திருந்ததே சிலாங்கூர் சுல்தானின் அதிருப்திக்கு காரணம் எனத் தெரிகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS