காப்புறுதி சாக்குப் போக்கு: ஆள்குறைப்பு  அதிகரிக்கும் அபாயம்! -எம்டியூசி

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், டிசம்.7- புதிதாக அமல்படுத்தப்படும் வேலை காப்புறுதித் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு சாக்குப் போக்குச் சொல்லி அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஆள்குறைப்புச் செய்யப்படும் அபாயம் உருவாகி இருப்பதாக மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியூசி) இன்று எச்சரிக்கை விடுத்தது.

அடுத்த ஆண்டில் இந்த வேலை காப்புறுதித் திட்டத்தை அமல்படுத்துவதற்காக சொக்சோ நிறுவனத்திற்கு அரசாங்கம் 122 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கி இருக்கிறது என்ற தகவலைத் தாங்கள் வரவேற்கும் வேளையில், சுமார் 57,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்ற தகவல் குறித்து மிகுந்த கவலை கொண்டிருப்பதாக எம்டியூசி தெரிவித்தது.

சுமார் 57,000 பேர் ஆள்குறைப்புச் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொக்சோ தலைமைச் செயல்நிலை அதிகாரி கூறி யிருப்பது கவலை தருகிறது. 

இந்தத் தகவல், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறது என்றும் கிட்டத்தட்ட நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் திறன் 6.2 விழுக்காட்டினை எட்டும் என்றும் அரசாங்கம் செய்த அறிவிப்புக்கும் வேலை இழக்கப் போகும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும் பொருத்தமில்லாமல் இருக்கிறது என்று எம்டியூசியின் பொதுச் செயலாளர் ஜே.சோலமன் தெரிவித்தார்.

வேலை இழப்போருக்கு மூன்று மாதங்களுக்கு தலா 600 ரிங்கிட் சிறப்பு அலவன்ஸ் வழங்கப்படுவதை அவர் கடுமையாகச் சாடினார். இந்தத் தொகை ஒருவர் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்கு போதுமானது அல்ல என்று சோலமன் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS