ஆசைப்பட்டு சாப்பிட்ட மீன் தலைக்கறியின் விலை 600 ரிங்கிட்டா?

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.21- தனக்கு மிகவும் பிடித்த மீன் தலைக்கறியை உண்பதற்காகச் சென்ற 56 வயது ஆடவர் ஒருவர், அதற்கு ரிம.600 பணம் செலுத்தியது குறித்து புலம்பிக் கொண்டிருக்கிறார். நான்குக் கிண்ணங்களில் அந்த மீன் தலைக்கறியை சுவைத்து சாப்பிட்டப் பின்னர், அதற்கான பில்லை வாங்கிப் பார்த்த தாம் அதிர்ச்சியுற்றதாக தெரிவித்தார். 

ஃபாவுட்சி அஸ்ராபுடின் என்ற அந்த 52 வயது ஆடவர் தனது குடும்பத்தாருடன், கோலாலம்பூரில் பிரசித்திப் பெற்ற அந்த உணவகத்தில், மீன் தலைக்கறியைக் கேட்டு சாப்பிட்டதாகக் கூறினார். அதற்கான பில்லை வாங்கிப் பார்க்கையில், 1,000 ரிங்கிட்டு தாங்கள் உணவு உண்டதை அறிந்து தாம் திகைத்ததாக அவர் சொன்னார். 

மீன் தலைக்கறியை தாம் அடிக்கடி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ள அவர், அந்த உணவுக்கு 50திலிருந்து 60 ரிங்கிட் வரைதான் தாம் இதுவரை செலுத்தி வந்ததாகத் தெரிவித்தார். அந்த உணவுக்கு தாம் செலுத்திய ரசீதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த அவர், அந்த உணவகத்தின் சாப்பாட்டு விலை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்று ஒப்புக் கொண்டார். 

"ஏன் இவ்வளவு விலை என்று நான் அந்த உணவக ஊழியரிடத்தில் கேள்வி எழுப்பினேன். மீன்களின் தலை அளவு பொருத்தே அதற்கான பணம் வசூலிக்கப்படும் என்று அவர் பதிலளித்தார். இச்சம்பவம் குறித்து நான் போலீசில் புகார் கொடுப்பதாக இல்லை. அதற்கான பணத்தை நான் செலுத்தி விட்டேன். இனிமேல், எங்கு சாப்பிடச் சென்றாலும், முதலில் விலைப்பட்டியலை கவனியுங்கள்" என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவுறுத்தினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS