சிபு மருத்துவமனையில் தீ! நோயாளிகள் வெளியேற்றம்!

சமூகம்
Typography

 

சிபு, நவ.18- சபாவின் சிபு நகரில், பொது மருத்துவமனையிலுள்ள ஆண்களுக்கான வார்டில் நிகழ்ந்த தீ விபத்தின் காரணமாக 18 வார்டுகளில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

வார்டின் கழிவறைப் பகுதியில் இருந்த குளிர் சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவியதாகக் கூறப்பட்டது. இந்த தீ விபத்தில் மருத்துவ மனையில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்ததாக சபா தீயணைப்புத் துறையின் இடைக்கால தலைவர் வான் கமாருடின் தெரிவித்தார்.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவர்கள் அனைவரும் மருத்துவமனையை விட்டு உடனடியாக வெளியேற்றப் பட்டதாகவும் மருத்துவ மனைக்கு விரைந்த இரண்டு தீயணைப்பு வாகனங்களும் 19 வீரர்களும் சில நிமிடங்களில் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டதாகவும் வான் கமாருடின் சொன்னார்.

பின்னர் காலை11 மணியளவில் அனைத்து நோயாளிகளும் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பினர்.

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS