கார் திருட்டுக் கும்பல் முறியடிப்பு: ஏழு ஆசாமிகள் பிடிபட்டனர்!

சமூகம்
Typography

 

பெட்டாலிங் ஜெயா, நவ.18- ஆயுதம் ஏந்தி கொள்ளையடிப்பதிலும் கார் திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்ட வந்த எழுவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் முகமட் ஸானி சே டின் கூறினார். 

கடந்த அக்டோபர் 18-ஆம் தேதியன்று, கிளானா ஜெயாவில் நடந்த சிறிய சாலை விபத்தின் போது, டோயோட்டா ரகக் கார் ஒன்று களவுப் போனதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் வாயிலாக அந்த எழுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஸானி மேலும் கூறினார். 

"வெட்டுக் கத்தியைக் காட்டை அந்த காரின் ஓட்டுநரிடம் அந்தச் சந்தேகப் பேர்வழிகள் கொள்ளையிட்டு காரை அபகரித்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, அவர்களைப் பிடிக்கும் பொருட்டு, பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த 12-ஆம் தேதியன்று அந்த எழுவரும் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர். 

கடந்த 12-ஆம் தேதியன்று, டாமான்சாரா பெர்டானா என்ற இடத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர். பேரா மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் மேலும் ஐவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன், ஏற்கனவே பெட்டாலிங் ஜெயாவில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவன் என்று தெரிய வந்துள்ளது. 

களவுச் செய்யப்பட்ட டோயோட்டா ரகக் கார் உட்பட 9 வாகனங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் நிகழ்ந்த 10 கொள்ளைச் சம்பவங்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு உண்டு என்றும் ஸானி தெரிவித்துக் கொண்டார்.  

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS