மருத்துவமனையில் அன்வாரை  சந்தித்து நலம் விசாரித்த பிரதமர்!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், நவ.17- கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைப்  பெற்றுவரும் டத்தோ அன்வார் இப்ராஹிமை மருத்துவமனையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தம்பதியர் சந்தித்து நலம் விசாரித்தனர். 

அண்மையில் அன்வார் இப்ராஹிம், மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவமனையில் குணமடைந்து வரும் அன்வாரை பிரதமர் தம்பதியினர் இன்று நேரில் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். 

மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டுமென்று தமது பிரார்த்தனையை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சந்திப்பின் போது அன்வாரின் துணைவியார் டத்தோஶ்ரீ வான் அஜிஸாவும் உடன் இருந்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS