'பாலியல் குற்றவாளி' செல்வகுமார் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.17- கனடாவில் நடந்த தொடர் கற்பழிப்பு சம்பவங்களில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு 24 வருடச் சிறைத் தண்டனையை அனுபவித்து மலேசியாவிற்குத் திரும்பிய செல்வகுமார் சுப்பையா தற்போது லண்டனில் உள்ள தனது உறவினர்கள் வீட்டில் வசிப்பதாக அவரின் உறவுக்காரர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு, அங்கேயே வேலை செய்யும் முடிவில் செல்வகுமார் எங்கு இடம் பெயர்ந்துள்ளதாக அந்தப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் கூறினார். 

கனடாவிற்கு படிக்கச் சென்ற அவர், போதைப்பொருள் மற்றும் தொடர் கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டார்.  1992-ஆம் ஆண்டில், 18 பாலியல் வன்முறை, போதைப்பொருட்களை கொடுத்து பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டுகளும், இதர குற்றங்களை புரிந்ததன் பேரில் 10 குற்றச்சாட்டுகளும், பணம் பறித்தார் என்று 12 குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டு அவருக்கு கனடா சட்ட்த்தின் கீழ், 24 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட்து. 

செல்வகுமார் குறைந்தப் பட்சம் 1,000 பெண்களையாவது கற்பழித்திருப்பார் என்று அவரை விசாரணைக்கு உட்படுத்திய கனடா போலீசார் கூறினர் என்பது குறிப்பிட்த்தக்கது. அவரின் குடும்பத்தார், அந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர். 

கடந்த ஜூன் மாதன் மலேசியாவிற்கு திரும்பிய செல்வகுமார், கிறிஸ்துவ மதத்தை தழுவினார் என்று சில தகவல் ஊடகங்கள் தெரிவித்தன. 

BLOG COMMENTS POWERED BY DISQUS