தந்தையால் பாலியல் வன்முறை; 12 வயது சிறுமியை சமூகநல இலாகா மீட்டது!

சமூகம்
Typography

 

மலாக்கா, நவ.14- கடந்த மூன்று வருடங்களாக தனது சொந்தத் தந்தையால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 12 வயது சிறுமியை சமூக நல இலாகா மீட்டது. 

அச்சிறுமியின் அந்த அவலநிலை குறித்து அச்சிறுமி பயிலும் பள்ளியிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ஜாசின், மெர்லிமாவ் என்ற பகுதியிலுள்ள அந்தச் சிறுமியின் வீட்டிலிருந்து சமூக நல அதிகாரிகள் அவளை மீட்டனர். 

"தனது சொந்த மகள் என்று கூட பாராமல், அவளின் 9 வயதிலிருந்து பாலியல் கொடுமைக்கு அவளின் தந்தை அவளை உட்படுத்தியதாக நம்பப்படுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, அச்சிறுமியின் கவுன்சிலிங் ஆசிரியர் இது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தார். இயற்கைக்கு எதிரான உறவிலும் அந்தச் சிறுமியை அவளின் தந்தை உட்படுத்தியுள்ளான்" என்று சமூகநல இலாகாவின் இயக்குநர் புர்ஹானுட்டின் பச்சிக் சொன்னார். 

அந்தக் கொடூரத்தைப் புரிந்த 32 வயது ஆடவனுக்கு 7 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் அச்சிறுமி, நான்காவது பிள்ளையாவாள். அச்சிறுமி, மலாக்கா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளாள். இச்சம்பவம் 2001-ஆம் ஆண்டின் சிறுவர் சட்டத்திட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS