பினாங்கு: இந்தியத் திருமண பதிவாளர் வேண்டும்! அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை!

சமூகம்
Typography

நிபோங் திபால், நவ.14- பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் திருமணப் பதிவுத் துறையில், இந்துக்களின் திருமணங்களை பதிவு செய்யும் பொருட்டு, இந்தியப் பதிவாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று இந்தியர்கள் மற்றும் இந்துக்களின் அரசு சாரா நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.  

கடந்த 30 வருடங்களாக இந்துக்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக குறைந்த பட்சம் ஓர் இந்தியராவது நியமிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் கடந்த 10 வருடங்களாக அந்தப் பதவி காலியாக இருப்பதாக, செபராங் பிறையைச் சேர்ந்த ஆர்வலரான என்.முனுசாமி கூறினார். 

இந்தியர்களின் திருமணங்களை பதிவு செய்யும் பொருட்டு இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று ஆலய நிர்வாகங்கள் கேட்டுக் கொண்ட போதிலும், அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று அரசு சாரா நிறுவனங்கள் தகவல் தெரிவித்தன. 

விடுமுறை காலங்களில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்தியர்களின் திருமணங்களை, அந்தத் தேதிகளில் பதிவு செய்ய உதவும் வகையில், இந்தியர்கள் நியமிக்கப்பட்டால் அது அனைவருக்கும் எளிதாக இருக்கும் என்று பினாங்கு மாநில மலேசிய இந்து சங்கத்தின் ஆலய ஒருங்கிணைப்பாளர் எஸ்.உடையப்பன் கருத்து தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS