லிம் குவான் மீதான வீட்டுமனை ஊழல் வழக்கு; மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைப்பு!

சமூகம்
Typography

ஜோர்ஜ்டவுன், நவ.14- சந்தை விலையை விட மிக குறைவான விலையில் வீடு வாங்கியதாக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் லிம் குவான் தற்காப்பு வாதம் புரிய தேவை இல்லை எனும் மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் இன்னும் முடிவெடுக்காத நிலையில் இவ்வழக்கை அடுத்த வருடம் மார்ச் 15ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.

முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி பாங் லீ கூன் என்ற தொழிலதிபரிடமிருந்து அப்போதைய சந்தை விலையான ரிம.4.27 மில்லியன் மதிப்புள்ள வீட்டை ரிம.2.8 மில்லியன் விலைக்கு மட்டுமே வாங்கியதாக லிம் குவான் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS