வேனுடன் மைவி கார் நேருக்கு நேர்  மோதல்: இருவர் பலி! 11பேர் காயம்!

சமூகம்
Typography

 

சுங்கை பட்டாணி, அக்.17- தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் ஒன்றுடன் கார் மோதிய கோர விபத்தில் இருவர் மாண்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து இங்கு கம்போங் பாடாங் புலோவுக்கு அருகில் நடந்தது.

சுங்கைப் பட்டாணியை நோக்கி எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த வேன் மீது அதிகாலை 5.55 மணியளவில் மைவி கார் ஒன்று நேருக்கு நேர் மோதியது. 

இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்ட வேகத்தில் வேன் பலமுறை சுற்றிச் சுழன்று வட்டமடித்தில் வேனுக்குள் இருந்த 10 ஊழியர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

வெளியே வீசப்பட்டு விழுந்த தொழிற்சாலை ஊழியரான ஒரு பெண் மீதுனாந்த மைவி கார் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அதேவேளையில் மைவி காரின் ஓட்டுனரும் விபத்தில் மாண்டார்.

இந்த விபத்தில் காயமடைந்த 11 பேரும் உடனடியாக சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். திக்காம் பத்து என்ற இடத்தில் இருந்து பிரையிலுள்ள சோனி தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பணியை அந்த வேன் ஓட்டுனர் செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

அவசர அழைப்புக் கிடைத்து தாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது, வேனில் இருந்த ஊழியர்கள் பலர் ஆங்காங்கே சிதறி விழுந்து கிடந்ததாகவும் வேன் ஓட்டுனர் மட்டும் வேனின் இருக்கையில் சிக்கிக் கொண்டவாறு இருந்ததாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர் சொன்னார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS