போதைப் பொருள் கூத்து 'பார்ட்டி' 26 பெண்கள் உள்பட 74 பேர் கைது!

சமூகம்
Typography

ஜொகூர்பாரு, செப்.24- இங்கு கோல்ஃப் ரிசோட் பங்களாவில் நடந்த கேளிக்கை மற்றும் போதைப்பொருள் புழக்கத்துடன் கூடிய இளைஞர்களின் கூத்தும் கொண்டாட்டமும், போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த நடவடிக்கையின் போது 74பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பதின்ம வயது சிறுமிகள் உள்பட 26 பெண்களும் அடங்குவர். நள்ளிரவில் போலீசார் இந்த பங்களாவுக்குள் புகுந்த போது பலத்த சத்தத்துடன் இசை ஒலித்துக் கொண்டிருக்க பலர் நடனமாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

இவர்களில் பலர் மது அருந்தி இருந்தனர். இவர்களிடமிருந்து 'எக்டாஸி', 'எரிமின்' மற்றும் 'கெத்தமைன்' மாத்திரைகளும் பவுடர்களும் கண்டுபிடிக்கப்பட்டன. தொடக்க விசாரணையில் இவர்களில் 22 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று வடக்கு ஜொகூர்பாரு ஓசிபிடி முகமட் தாய்ப் சொன்னார்.

கைது செய்யப்பட்ட 74 பேரில் பெரும்பாலோர் 16 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இசைக் கருவிகள் உள்பட பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS