மின்கம்பி அறுந்தது; குவாங்-ரவாங்  இ.டி.எஸ்.ரயில் தற்காலிக நிறுத்தம்

சமூகம்
Typography

கோலாலம்பூர், செப்.24- குவாங்கிற்கும் ரவாங்கிற்கும் இடையேயான இ.டி.எஸ். எனப்படும் மின்சார ரயில் சேவை, தற்காலிகமாக நேற்று நிறுத்தப்பட்டது. மின்சாரா கம்பி அறுந்து விட்டதன் காரணமாக இந்தச் சேவை பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுது பார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குவாங் மற்றும் ரவாங் இடையிலான போக்குவரத்துத் தடங்கலில் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுப் போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும் படி கே.டி.எம். ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டது.

சுங்கை பூலோவுக்கும் ரவாங்கிற்கும் இடையே சென்று வரக்கூடிய வகையிலான பஸ் சேவை வழங்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

அதேவேளையில் தஞ்சோங் மாலிம்-செராண்டா, மற்றும் போர்ட் கிள்ளான் -சுங்கைபூலோ ஆகிய இடங்களுக்கு இடையிலான ரயில் சேவை வழக்கம் போலவே நடந்து வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS