ஜெயலலிதா இட்லியும் சாப்பிடல, சட்னியும் சாப்பிடல…! எல்லாம் பொய்! -சீனிவாசன்

சமூகம்
Typography

மதுரை, செப்.23- ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது பொய் ஜெயலலிதா இதைச் சாப்பிட்டார், அதைச் சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியதற்கு எங்களை மன்னித்து விடுங்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக தெரிவித்தார்.

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல்நல குறைபாட்டால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காண மருத்துவமனை வாயிலில் ஏராளமான கூட்டம் கூடியது.

நாளுக்கு நாள் ஜெயலலிதா குறித்த தகவல் அறியாமல் தொண்டர்களும், மக்களும் வேதனை அடைந்தனர். இந்நிலையில் ஜெயலலிதா உப்புமா சாப்பிட்டார், இட்லி சாப்பிட்டார் என அமைச்சர்களும், அதிமுக செய்தி தொடர்பாளர்களும் ஊடகங்களுக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர். 

அண்மை காலமாக சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா மரணம் குறித்த குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் பொது இடங்களில் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதன்படி ஜெயலலிதாவை கொன்றதே சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தான் என்று அண்மையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

மேலும், விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்தவுடனே ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ வெளியிடுவோம் என்று சசிகலா குடும்பத்தினர் கூறுகிறார்கள். அந்த வீடியோவை வெளியிடுங்கள். உண்மையை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.

BLOG COMMENTS POWERED BY DISQUS