பிரசவ வலியால் பெட்ரோல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த கர்ப்பிணி மாது!

சமூகம்
Typography

 தைப்பிங், செப்.23- தைப்பிங் பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இருந்த போது அங்குள்ள பணியாளர்களின் உதவியுடன் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

செவ்வாய் கிழமை காலை 6.50 மணியளவில் 27 வயதுடைய நோர்ஷமிலா இஷாக் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவ வலி வந்ததை அடுத்து தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனது கணவரான 48 வயதுடைய அப்துல் மாலிக் அமிக் உடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்கும் போது பிரசவ வலி வந்தது போல் உணர்ந்த அவர், தனது கணவரிடம் தெரிவித்தார். 

அப்போது அவசர அவசரமாக தைப்பிங்கில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தினார் அப்துல் மாலிக் அமிக். பிரச்சவ வலியோடு அங்குள்ள கழிப்பறைக்குச் சென்ற நோர்ஷமிலா. குழந்தையின் தலை சற்று  வெலியே வந்து விட்டதை உணர்ந்த அதே நேரத்தில், வலி தாங்காமல் கத்தினார். சத்தத்தைக் கேட்டு பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பணியார்கள் கழிப்பறைக்கு விரைந்து ஓடினர். 

பிரசவ வலியோடு பாதி தலை வெளியே தெரியும் குழந்தையுடன் கழிப்பறையில் தவித்துக் கொண்டிருந்தார் நோர்ஷமிலா. அவருக்கு மருத்துவத் துறையில்  பட்டப்படிப்பை முடித்து விட்டு தற்காலிகமாக  பெட்ரோல் நிலையத்தில் பணிப்புரிந்து வந்த பணியாளர் ஒருவர் நோர்ஷமிலவுக்கு உதவினார்.  

ஆம்புலன்ஸ் வரும் வரைக்கும் அப்பெண் அவருக்கு உதவி புரிந்ததாக பெட்ரோல் நிலையத்தின் தலைமை நிர்வாகி ருஷிலா அப்துல் தாலிப் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் 2 புள்ளி 3 கிலோ கிராம் எடை கொண்ட குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயும் பிள்ளையும் மிகுந்த நலத்துடன் இருக்கின்றனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS