பத்துமலையில் கட்டுமானப் பொருளைச் சுமந்து செல்வது மக்கள் விருப்பமே! -டான்ஶ்ரீ நடராஜா

சமூகம்
Typography

 கோலாலம்பூர், செப்.22- பத்துமலை படிக்கட்டில் உச்சி வரை சுற்றுப்பயணிகள் கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்வது அவர்கள் விரும்பி செய்வதே தவிர அது கட்டாயத்தின் பேரில் செய்யவில்லை என பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.

கட்டுமானப் பொருட்களைச் சுற்றுப் பயணிகளும் பக்தர்களும் எந்தவொரு வற்புறுத்தலும் இன்றி, அவர்களே விரும்பி, அந்தப் பொருட்களை மேலே எடுத்து செல்கிறார்கள் என்று அவர் விளக்கினார்.

நற்பண்புகளையும் கோவில் திருப்பணிகள், கூடிய விரையில் முடிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்தைத்தான் இவர்கள் செய்யும் இந்தப் பணி வெளிக்காட்டுகிறது. கோவிலின் திருப்பணிக்கு உதவும் மக்களுக்கு நாங்கள் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறோம். இதில் விருப்பமில்லாதவர்களை நாங்கள் கட்டாயப் படுத்தவில்லை என டான்ஶ்ரீ நடராஜா தெரிவித்தார்.

பத்துமலை திருத்தலத்தில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் வேளையில் சுற்றுப்பயணிகளும் பக்தர்களும் கற்கள், மணல், சிமெண்ட் ஆகியவற்றை மேலே எடுத்து செல்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இச்செயலை அவர்கள் விரும்பியும் சந்தோஷமாகத்தான் செய்கிறார்கள்.

இதுபோன்ற செயல்கள் இறைவனுக்கு செய்யும் ஒரு புண்ணிய செயலென்று இவர்கள் கருதுகிறார்கள். இச்செயலைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு சிலர்,  கட்டாயமாக கட்டுமானப் பொருட்களைப் படிக்கட்டில் எடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கலாம் என்று டான்ஶ்ரீ நடராஜா சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS