பினாங்கில் வெள்ளம் பாதிப்பு: கட்டட  உரிமையாளர்களுக்கு ரிம.400 நிதியுதவி! 

சமூகம்
Typography

ஜோர்ஜ் டவுன், செப்.20– பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டட உரிமையாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா 400 ரிங்கிட் வழங்கப்படும். இந்த உதவித்தொகை ஒரேயொரு முறை மட்டுமே வழங்கப்படும் என்று பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

'ஹுரிகேன் டொக்சூரி' என்று அழைக்கப்படும் இந்த கனத்த மழையின் காரணமாக பினாங்கு மக்கள் அவதியுற்றதால் இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது. அதோடு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்த இழப்பீட்டுத் தொகை 400 ரிங்கிட் வழங்கப்படும். இதுவொரு நடைமுறையாக எதிர்காலத்தில் கைக் கொள்ளப்பட மாட்டாது என்று முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பினாங்கு நகராண்மைக் கழகம், செபராங் பிராய் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இதனை கையாளுவார்கள். இதற்கான விண்ணப்பப் பாரங்கள் அடுத்த திங்கட்கிழமை (செப்டம்பர் 25) வெளியாக்கப்படும். அதனைப் பூர்த்தி செய்து அனுப்புவதற்கு ஒரு மாத காலம் மட்டுமே வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பகுதிகள் தற்போது பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜசெக கட்சித் தலைமையில் மாநில அரசு, பினாங்கில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS