'அந்தப் பெண் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; அவரை விட்டு விடுங்கள்'- ஜொகூர் சுல்தான்

சமூகம்
Typography

ஜொகூர் பாரு, செப்.14– ஜொகூர் சுல்தானின் வாகன ஊர்வலத்தின் போது பெண் ஒருவர் அவரின் கன்னத்தில் முத்தமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரை அவமதிக்காதீர்கள் என்று பொது மக்களிடம் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் கேட்டுக் கொண்டார்.

இந்த வேண்டுகோளைக் காணொளியாக அவர் முகநூலில் பதிவு செய்தார். அந்தக் காணொளியில் அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தன்னை முத்தமிடவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஊர்வலத்தின் போது அப்பெண் தனது காதில் ஏதோ ஒன்றை சொல்ல வந்தார். ஆனால், அந்த இடம் சத்தமாக இருந்ததால் அவர் சொல்ல வந்ததைச் சரியாக கேட்க முடியவில்லை என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார். சுல்தானின் காவலாளிகள் அந்த பெண்ணைத் தடுக்க முயற்சித்தும் அவர் விடவில்லை. 

கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சுல்தானை அவமதித்ததற்காகவும் பதற்ற சூழலை ஏற்படுத்தியதற்காகவும் போலீசார் ஆயேர் ஈத்தாமில் அந்த பெண்ணை கைது செய்தனர்.  

28 வயதுடைய அந்த பெண்ணின் மீது எந்த குற்றங்களும் பதிவு செய்யப்படவில்லை. அவர் ஓராண்டு காலமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.  

BLOG COMMENTS POWERED BY DISQUS