கிராமட் தீ: இறந்தவர்களை அடையாளம் காண மரபணு சோதனை அவசியம்- சுப்ரா

சமூகம்
Typography

கோலாலம்பூர். செப்.14 - கம்போங் டத்தோ கிராமட்டில் சமயப் பள்ளியில் தீ விபத்து நடந்ததை அடுத்து, அதில் உயிரிழந்த 23 பேரை அடையாளம் காணுவதற்காக தற்போது மரபணு சோதனை நடத்தப்பட்டு வருகின்றது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார். 

இந்த தீ விபத்தில் மிகவும் மோசமாக உடல்கள் கருகிய நிலையில் அவர்களை அடையாளம் காண கடினமாக உள்ளதால் இந்த மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் உள்ள இரசாயனப் பிரிவு இந்த மரபணு சோதனையை மேற்கொண்டு வருகிறது. இரண்டு நாட்களுக்குள் இந்த மரபணு சோதனையின் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டு பிடித்து அவர்களின் குடும்பத்தாருடன் ஒப்படைப்போம் என்று சுப்ரமணியம் தெரிவித்தார். 

டத்தோ சுப்ராமணியம் மற்றும் சுகாதார துறையின் துணை அமைச்சரான டாக்டர் ஹில்மி யஹாய கோலாலம்பூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள். 

BLOG COMMENTS POWERED BY DISQUS