அரசாங்கம் மாணவர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டுள்ளது- துணைப்பிரதமர் கருத்து!

சமூகம்
Typography

கோலாலம்பூர், செப்.14- கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படாத சமயப் பள்ளிகளின் மாணவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் விட்டு கொடுக்காது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரம் மாணவர்களின் பாதுகாப்பும் முக்கியமானதாகும். ஆக, ஒவ்வொரு சமயப் பள்ளியும் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல், தீ தடுப்பு பாதுகாப்பு அம்சங்கள் சமயப் பள்ளிகளில் முறையாக அமைக்கப்பட வேண்டும் என்று தீ விபத்துக்குள்ளான டத்தோ கிராமட்டிலுள்ள சமயப் பள்ளியைப் பார்வையிட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இது நம் நாட்டில் பதிவாகிய முதல் சம்பவம் கிடையாது. இது போன்ற சம்பவங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று அவர் கூறினார். 

சமயப் பள்ளிகள் அனைத்தும் மாநில நிர்வாகத்தின் கீழ் வருவதால் இப்பள்ளிகள் அனைத்தும் முறையாக செயல்படுவதை மத்திய அரசாங்கம் ஜாகிமிடம் உறுதி செய்து வருகிறது என்றார் அவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS