'நான் தவறு செய்திருந்தால் மன்னியுங்கள்' -இறப்பதற்கு முதல் நாள் அமில் எழுதிய கடிதம்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், செப்.14- பெற்றோரின் மீது கொண்ட நேசத்தை கடிதமாக எழுதி நேற்று தன்னைப் பார்க்க வந்த பெற்றோரிடம் கொடுத்த அமில் அஷ்ராப் அப்துல் ரஷிட் என்ற மாணவன் இன்று ஜாலான் டத்தோ கிராமட்டிலுள்ள சமயப் பள்ளியில் நிகழ்ந்த கோரத் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரின் மனதைச் நெகிழச் செய்தது.

நேற்று அமிலைப் பார்க்க வந்த பெற்றோரிடம் அவன் அந்த கடிதத்தைக் கொடுத்துள்ளான். அக்கடிதத்தில் “அம்மா, அப்பா நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறேன். என்னை நன்றாக பாசமுடன் பார்த்துக் கொள்வதற்கு மிக்க நன்றி. நான் உங்களுக்கு பட்ட கடனை எவ்வாறு தீர்க்க போகிறேன் என்று தெரியவில்லை.

தாபிஸ் சமயப்பள்ளியில் நன்றாக படித்து உங்களுக்குப் பெருமைச் சேர்ப்பேன்”, என்று அமில் அக்கடிதத்தில் பெற்றோரின் மீது கொண்ட பாசத்தை வெளிகாட்டி இருந்தார்.

தீ விபத்தை பற்றி தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த 42 வயதான நோர் ஹயாத்தி காலிட் என்ற அமிலின் தாயார் அந்தக் கடிதத்தைச் செய்தியாளர்களிடம் காட்டினார். கிளந்தானில் படித்துக் கொண்டிருந்த அமிலை அருகில் இருக்க வேண்டும் என்று கருதி இந்தச் சமயப்பள்ளிக்கு மாற்றியதாக அவரது தாயார் வருத்தமாக கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS