'கிரேப்' காரில் மாணவியை பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்திய ஓட்டுனர்!

சமூகம்
Typography

கோலாலப்பூர், செப்.14 – கடந்த திங்கள்கிழமை கிரேப் காரில் ஏறிய கல்லூரி மாணவி ஒருவரை அதன் ஓட்டுனர் பாலியல் உறவுக்குக் கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

காலை 11.45 மணியளவில் செராஸ்சில் உள்ள கல்லூரியிலிருந்து மாணவி ஒருவரை ஏற்றிக் கொண்டு அவருடைய தங்கும் விடுதிக்கு ஏற்றிச் சென்றார். சில நிமிடங்கள் கழித்து அந்தக் கிரேப் ஓட்டுனர் தவறான வழியில் செல்வதை உணர்ந்த அந்த மாணவி அவரிம் கேள்வி எழுப்பினார்.

அப்போது யாரும் இல்லாத இடமாக பார்த்துக் காரை நிறுத்திய கிரேப் ஓட்டுனர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த மாணவியிடம் தன்னுடன் பாலியலில் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். 

அதை மறுத்த அந்த மாணவியைத் தாக்கியதோடு அவரின் கழுத்தையும் நெரிக்க முயன்றார். அந்தச் சாலையில் மற்றொரு கார் வந்ததைக் கவனித்த அந்த ஓட்டுனர் உடனே கழுத்தை நெரிப்பதை நிறுத்திவிட்டார். 

பிறகு தன்னுடன் விடுதியல் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியபோது வேறு வழியின்றி அந்த மாணவி ஏதேனும் தங்கும் விடுதிற்கு அழைத்துச் செல்லும் படி சொன்னார். 

ஸ்தாப்பாக்கிலுள்ள ஒரு தங்கும் விடுதியை சென்றடைந்த   அந்த மாணவி பலமாக கிரேப் கார் ஓட்டுனரை தாக்கிவிட்டு காரிலிருந்து தப்பித்து ஓடி அருகில் கார் பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆட்களிடம் உதவியை கோரினார் என்று சைனா பிரஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS